எட்டி உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்.

by Editor / 11-08-2024 10:42:14pm
எட்டி உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில்  உள்ள நிர்மலா அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது,கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளிகளுக்குநடந்த இடையேயான கால்பந்து விளையாட்டுப் போட்டியில் நிர்மலா பள்ளி மாணவர்கள் சரியான முறையில் விளையாடவில்லை என ஆத்திரமடைந்து, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை,  மாணவர்களை தரையில் அமரவைத்து தகாத வார்த்தைகளால்,   திட்டியிருக்கிறார்.அப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் இதை வீடியோவாக எடுத்து வெளியிட வீடியோ வைரலாகி சேலம்  மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி,  உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலையை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

 

Tags : எட்டி உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்.

Share via