ஆடலரசன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கான எந்த உறுதியான அறிவிப்பு கட்சி தலைமையில் இருந்து வெளிவரவில்லை.
நேற்று அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் முதல்வர் மு க ஸ்டாலினை சந்திக்க சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த பாதுகாவல் முதல் உதவி சந்திக்க அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த ஆளரசன் தனது உறுப்பினர் அட்டையை தூக்கி எறிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .தான் பட்டியல் இனத்தைச் சார்ந்தவன் என்பதால் தான் அனுமதி மறுக்கிறார்களா... என்று ஆவேசமாக கேட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் முதலமைச்சரை சந்தித்தார்.. இதற்குப் பின்னர் ,அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வர ஆரம்பித்துள்ளன. அவர் அறிவாலயத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட செய்தியில், இது போன்ற கருத்துக்கள் வெளிவந்துள்ளன. அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கான எந்த உறுதியான அறிவிப்பும் கட்சி தலைமையில் இருந்து வெளிவரவில்லை.
Tags :


















