நடிகர் கார்த்திக் நடித்த வா வாத்தியார்.வெளியிடநீதிமன்றம் தடை.

by Admin / 11-12-2025 01:36:20am
நடிகர் கார்த்திக் நடித்த வா வாத்தியார்.வெளியிடநீதிமன்றம் தடை.

நடிகர் கார்த்திக் நடித்து நளன் குமாரசாமி இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரித்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள படம் வா வாத்தியார். இப்படம் வெளியிடுவதற்கு தடை கோரி ,அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவர் தன்னிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கிய 10.35 கோடி தற்பொழுது 21.78 கோடி வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் .இதனை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் பணத்தை செலுத்திய பிறகு வெளியிடலாம் என்றும் அதுவரை படத்தை வெளியிடக் கூடாது என்று தடை விதித்து உள்ளது. வா வாத்தியார் படம் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கார்த்திக் நடித்த வா வாத்தியார்.வெளியிடநீதிமன்றம் தடை.
 

Tags :

Share via