பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை

by Editor / 23-06-2021 04:17:12pm
பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை

 

பப்ஜி விளையாட்டை சிறுவர்கள் விளையாட சொல்லிக் கொடுத்து அதன் மூலம் ஆபாசமாக பேசுவது இளம் பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் காரணமாக சமீபத்தில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மதனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறையினர் திட்டமிட்ட நிலையில் தற்போது இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறையினருக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறையினர் முடிவு செய்திருக்கின்றனர். பப்ஜி மதனுக்கு இன்ஸ்டாகிராம் பக்கங்கள் உள்பட வேறு ஏதேனும் சமூக வலைதளப் பக்கங்கள் உள்ளதா? வேறு பெயரில் யூடியூப் பக்கங்கள் உள்ளதா? என்கிற ரீதியில் இந்த விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் யார் யாரிடம் இருந்து பணத்தை பெற்றார்? பெற்ற பணத்தை எதில் முதலீடு முதலீடு செய்தார்? என்பது போன்ற தகவல்கள் இந்த விசாரணையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மதனின் 2 யூடியூப் சேனல்கள் ,முடக்கப்பட்டு அதில் இருந்த வீடியோக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ரூபாய் 4 கோடிக்கு மேல் இருந்த அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo