குற்றாலம் மெயினருவியில் 2வது நாளாக குளிக்க தடை ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று பெய்த சாரல் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது அதிலும் குறிப்பாக குற்றாலம் மெயின் அருவியில் நேற்று மாலை திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குறிக்க போலீசார் தடைவிதித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தற்போது வரை நீடித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடையானது இரண்டாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது இதனால் வார இறுதி நாட்களை கொண்டாட மெயின் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் குற்றால ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது
Tags : குற்றாலம் மெயினருவியில் 2வது நாளாக குளிக்க தடை ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்.