சட்டசபையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது - சசிகலா

by Staff / 14-04-2023 01:05:29pm
சட்டசபையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது - சசிகலா

கட்சியில் நான் எல்லோருக்கும் பொதுவானவர், கால நேரம் வர அனைவரும் ஒன்றிணைவோம் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். சென்னையில், அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓபிஎஸ் விவகாரத்தில் சட்டசபையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அனைவருக்கும் பொதுவாக நான் நடிக்கிறேன். சாதி அடிப்படையில் நான் செயல்பட்டதில்லை. சாதி அடிப்படையில் நான் செயல்பட்டிருந்தால் வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வராக்கியிருப்பேனா? என்றும் கூறினார். மேலும், சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருக்க கூடாது. அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார்.

 

Tags :

Share via

More stories