இணைய சேவைக்கு ரூ.3.26 கோடி அளிப்பு
தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் இணையதள சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறையால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நிலுவை வைக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது. இந்த இணையதள வசதிக்கான மாதாந்திர சேவைக் கட்டணத்தை செலுத்துவதற்கு ரூ. 3.26 கோடி நிதியை மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளது.
Tags : இணைய சேவைக்கு ரூ.3.26 கோடி அளிப்பு