4.5 கோடி ரூபாய் மற்றும் 30 சவரன் நகை கொள்ளை. 4 பேர் கைது தனிப்படை ஆந்திரா விரைவு

வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர்பகுதியை சேர்ந்தவர் ஆமெல்லா ஜோதினி, 58. இவர், இன்டர்நெட் கேபிள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவரது வீட்டின் ஒரு பகுதியை இரண்டாக பிரித்து அலுவலகமாகவும், அதில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த நவ., 17ல் ஆமெல்லா ஜோதினி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். பின், 20 ம் தேதி வீடு திரும்பினார். அப்போது, அலுவலகத்தில் இருந்த 4.5 கோடி ரூபாய் மற்றும் 30 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரனையில் வீட்டின் பூட்டுகளை உடைக்காமல், கள்ள சாவி போட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பணிபுரிந்த நபரே, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்தனர்.கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையர்களின் அடையாளம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரின் பதிவு எண்கள் கிடைத்தன.அங்கு பணியாற்றிய நபர்களே கொள்ளையில் ஈடுபட்டது உறுதியாகவே போலீஸாரின்
தொடர் தேடுதல் வேட்டைக்கு பிறகு, கொள்ளையில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த மணி, சதீஷ்குமார், சுரேஷ், ஆறுமுகம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய ஒரு கார் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அலுவலக ஊழியரான சேகர், அவரது மனைவியின் சகோதரர் ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த சீனு என்ற சீனிவாசன் உள்ளிட்டோர் கூட்டுச் சேர்த்து கள்ளச் சாவி செய்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த கொள்ளைக் கும்பலின் முக்கிய தலைவன் சீனிவாசன் அருள்பிரகாசம், சேகர் உட்பட மேலும் 4 பேர் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுவதால் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

Tags : 4.5 crore and 30 pieces of shaving jewelery. 4 arrested personal Andhra quick