பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் பகுதியாக ரத்து

by Editor / 10-03-2022 10:33:15pm
பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் பகுதியாக ரத்து

சாத்தூர் - கோவில்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை மின் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக பாலக்காடு - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (16731) மார்ச் 11 முதல் மார்ச் 19 வரை மதுரை - திருச்செந்தூர் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல  திருச்செந்தூர் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் (16732) மார்ச் 11 முதல் மார்ச் 19 வரை திருச்செந்தூர் - மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து மாலை 04.25 மணிக்கு புறப்படும்.

 

Tags : Partial cancellation of Palakkad-Thiruchendur train

Share via