பூனை குறுக்கே போனால் அபசகுனமா?

by Editor / 16-08-2021 04:33:21pm
பூனை குறுக்கே போனால் அபசகுனமா?


நாகரீகம் வளர்ச்சி அடைந்தாலும், அறிவியலில் நாம் முன்னேறிக் கொண்டிருந்தாலும் இன்னமும், மூட நம்பிக்கைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதில் ஒன்று தான் பூனை குறுக்கே சென்றால் அதனை அபசகுனம் என்று எண்ணுவது தான்.

இந்தப் பழக்கம் எதனால் வந்த து? எப்படி வந்தது என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் பார்ப்போம். பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தெருவிளக்குகள் இல்லாமல் தான் வாழ்ந்திருக்கிறார்கள். இவ்வளவு ஏன் வீடுகளில் கூட விளக்குகள் கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்ல வேண்டுமென்றால், மாட்டு வண்டியிலோ அல்லது குதிரை வண்டியிலோ தான் பயணம் செய்ய வேண்டும்.


நீண்ட தூர பயணமாக இருந்தால், இரவு நேரங்களில்தான் பயணம் செய்வார்கள்.

அப்படி குதிரை வண்டியிலோ அல்லது மாட்டு வண்டியிலோ பயணம் செய்யும் போது, எதிரே வரக்கூடிய பூனை வண்டியை ஓட்டு வருபவர்களின் கண்களுக்கு தெரியாது. அப்போது, பூனையின் கண்கள் மட்டும் தான் தெரியும்.

பொதுவாக பூனையின் கண்களை இருட்டு நேரங்களில் பார்க்கும் பொழுது, லைட் போட்டு வைத்திருப்பது போன்று அப்படியே மின்னும். பூனைக்கு மட்டும் தான் இப்படி இருக்குமா? என்று கேட்டால் இருக்காது. புலி, சிங்கம், கருஞ்சிறுத்தை, சிறுத்தை என்று காட்டு விலங்குகளுக்கும் கண்கள் இப்படித்தான் மின்னும். எதிரே வருவது பூனையா அல்லது காட்டு விலங்குகளா என்று மாடு அல்லது குதிரைக்கு தெரியாது. இதனைப் பார்த்து மாடு அல்லது குதிரை மிரண்டு விடக்கூடாது என்பதற்காக, வண்டியை ஓட்டுபவர்கள், சிறிது நேரம் வண்டியை ஓரங்கட்டிவிட்டு குதிரைக்கும், மாட்டிற்கும் தண்ணீர் காட்டி விட்டு அதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து செல்வார்களாம்.

இந்தப் பழக்கம் தான் நாளடைவில் பூனை குறுக்கே வந்தால் அபசகுனம் என்று மாறி அதுவே அப்படியே மூட நம்பிக்கையாக மாறிவிட்டது. பூனை குறுக்கே வந்தால் எந்தவொரு நல்ல காரியமும் நடக்காது. அதனால், வீட்டிற்கு திரும்பி வந்து தண்ணீர் குடித்துவிட்டு சிறிது நேரம் கழித்து செல்ல வேண்டும் என்ற மூட நம்பிக்கைக்கு வந்துவிட்டோம்.

இனிமேலும், இது போன்று நம்பிக்கொண்டிருந்தால், இனிமேல் அப்படி செய்யாதீர்கள். பொதுவாகவே எந்தவொரு காரியத்தையும் குழப்பமாக செய்யும் போது அதில், பிரச்சனைகள், குழப்பங்கள் வரத்தான் செய்யும். ஒரே மனதாக செய்து முடிக்கும் எந்தவொரு காரியமாக இருந்தாலும் சரி அது வெற்றியில் தான் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via