மாணவி தற்கொலை வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

by Editor / 14-12-2021 12:56:38pm
 மாணவி தற்கொலை வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவையிலுள்ள பிரபலமான தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் துன்புறுத்தலால் மனமுடைந்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

 இந்த சம்பவத்தைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையை இதற்கு காரணமான பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியரையும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.இந்நிலையில், இந்த விவகாரத்தில் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.கோவை மாநகர காவல் ஆணையர் பரிந்துரையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories