மதுரையில் 100-ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளில் பழமையான கட்டிடங்கள் அதிகம் உள்ளன.மேலமாசி வீதி அருகே உள்ள சூடம் சாமியார் தெரு பகுதியில் நூறாண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது.
மதுரையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மேல மாசி வீதி பகுதியில் நூறாண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து உள்ளது.நல்வாய்ப்பாக இந்த கட்டிடத்தில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் தொடர்ச்சியாக பழமையான கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என மதுரை மாநகராட்சி நிர்வாகம் தீயணைப்பு துறை உத்தரவிட்டுள்ள நிலையில் பழமையான கட்டிடங்களில் இது போன்று இடிந்து விழும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
Tags :