தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பரிதாப பலி

ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் ஆசனூர் அருகே கீழ்மாவள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி. மகாதேவன், கனகா ஆகிய தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த அகல்யா (7) என்ற குழந்தை நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த அடித்தேக்க தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆசனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தாளவாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :