இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.

by Admin / 05-02-2026 04:10:01pm
 இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.

 இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் 34,237 கோடு மதிப்பிலான 15 புதிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தமிழக சட்ட சபை தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட்டிற்கு  இந்த கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் மின்னணுவியல் மற்றும் வாகன உதிரிப்பவர்கள் தயாரிக்க நிறுவனங்களின் விரிவாக்க திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குண்டாய் நிறுவனத்தின் விரிவாக்க திட்டமும் இதில் அடங்கும் என்றும் அதேபோல் ராணிப்பேட்டையில் அமைய உள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தியை பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார் என்ற தகவலையும் தொழில்துறை அமைச்சர் டி .ஆர் .பி. ராஜா  பகிர்ந்து உள்ளார். சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் இறுதிக் கட்டங்களில் ஒன்று என்பதால் மகளிர் தொகை போன்ற முக்கிய நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

 

 

Tags :

Share via