எஸ்ஐ வினாத்தாள் கசிவு - பிஎஸ்எஃப் மருத்துவ அதிகாரி கைது
சர்ச்சைக்குரிய ஜம்மு காஷ்மீர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கேள்வித்தாள் கசிவு மோசடியில் எல்லை பாதுகாப்புப்படை (BSF) மருத்துவ அதிகாரி கைது செய்யப்பட்டார். பலுரா பிஎஸ்எப் தலைமையக மருத்துவ அதிகாரி டாக்டர். கர்னைல் சிங் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் எஸ்ஐ தேர்வின் வினாத்தாளை பெருமளவு பணம் பெற்றுக்கொண்டு கசியவிட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மருத்துவ அதிகாரியிடம் விரிவாக விசாரிக்கப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு ஊழல் தொடர்பாக 8 குற்றவாளிகளை சிபிஐ முன்பு கைது செய்தது.
ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் செலக்ஷன் கிரேடு கான்ஸ்டபிளாக (எஸ்ஜிசிடி) நியமிக்கப்பட்ட கௌரின் நூர் கிராமத்தைச் சேர்ந்த சுனி லாலின் மகன் ராமன் ஷர்மா, அக்னூரில் உள்ள கைங்க் ஜாகிரில் வசிக்கும் ராம் லால் சர்மாவின் மகன் சுரேஷ் சர்மா, ஜெகதீஷ் சர்மா. தானி ராம், மஸ்யால் நாராயணா, கவுர், அரசு ஆசிரியர் உள்ளிட்ட எட்டு குற்றவாளிகள் முன்பு கைது செய்யப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மட்டன் ஐஆர்பி கான்ஸ்டபிள் கேவல் கிரிஷன், சிஆர்பிஎஃப்-ல் இருந்து தானாக முன்வந்து ஓய்வு பெற்ற கக்ரியாலைச் சேர்ந்த மேலா ராமின் மகன் அஸ்வனி குமார் மற்றும் அக்னூரில் உள்ள பெல் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் குமார் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. விண்ணப்பதாரர்களிடம் இருந்து 1.25 கோடி ரூபாய் இவர்கள் லஞ்சம் பெற்றுள்ளனர்
Tags :