விஜய் தனித்துப் போட்டியிட்டால் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்-பிரேமலதா விஜயகாந்த்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தவெக விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கேப்டன் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டார். அதே போல 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிட்டால் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்" என்றார்.
Tags : விஜய் தனித்துப் போட்டியிட்டால் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்-பிரேமலதா விஜயகாந்த்.



















