ஜம்மு விமானப்படைத் தளத்தில் 2 குண்டுகள் வெடிப்பு

by Editor / 27-06-2021 11:12:25am
ஜம்மு விமானப்படைத் தளத்தில்  2 குண்டுகள் வெடிப்பு

ஜம்மு விமானதளத்தில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. நள்ளிரவு 1.45 மணியளவில் விமான நிலைய தொழில்நுட்ப பிரிவு கட்டடத்தின் மேற்கூரையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் விமான நிலையத்தில் பதற்றம் தொற்றிக்கொண்ட நிலையில், அடுத்த 5வது நிமிடத்தில் கீழ் தளத்தில் குண்டு வெடித்தது.

இதையடுத்து சம்பவ இடங்களை பாதுகாப்பு துறையினர் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மூத்த அதிகாரிகள், காவல்துறை மற்றும் தடயவியல் துறை அதிகாரிகளும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரியவந்துள்ளன.

 

Tags :

Share via