தமிழகத்தில் பரவும் கண்டெய்னர் கலாச்சாரம்! திகிலில் அரசியல் பிரமுகர்கள்

by Editor / 20-04-2021 03:39:33pm
தமிழகத்தில் பரவும் கண்டெய்னர் கலாச்சாரம்! திகிலில் அரசியல் பிரமுகர்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து . மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகவுள்ளது.. மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை திமுகவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில், விருத்தாச்சலம் திட்டக்குடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையத்தின் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரிக்கு 500 மீட்டர் தொலைவில் மர்மமான லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதைப்பார்த்த திமுகவினர் அந்த லாரியை சிறை பிடித்து, சோதனை மேற்கொள்ளுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருதாச்சலம் சார் ஆட்சியர், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் அந்த லாரி பொள்ளாச்சியில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு தேங்காய் நார்கள் ஏற்றிச் சென்றதும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக அந்த லாரி செல்வதும் தெரியவந்துள்ளது. அந்த லாரியை அமலாக்கத்துறை சீல் செய்து வைத்திருப்பதால் திறந்து பார்க்க முடியாது என சார் ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையேற்க மறுத்த திட்டக்குடி திமுக வேட்பாளர் கணேசன், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறைபிடிக்கப்பட்ட லாரி அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags :

Share via