பெங்களூருவில் பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் சிக்கி இருவர் பலி

by Editor / 24-09-2021 11:32:41am
பெங்களூருவில் பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் சிக்கி இருவர் பலி

பெங்களூருவில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள சாம்ராஜ்பேட்டையில் பத்ரகாளியம்மன் என்ற லாரி பழுது பார்க்கும் கடை உள்ளது. அதன் உள்பகுதியில் பட்டாசு குடோனும் செயல்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றுதிடீரென வெடிவிபத்து ஏற்பட்டதில், அதில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின. அப்போது அருகில் இருந்த 2 பேர்இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டதால், அருகிலுள்ள கடைகளுக்கு நெருப்பு பரவாமல் தடுக்கப்பட்டது. காயமடைந்த 3 பேரை மீட்டு விக்டோரியா அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சாம்ராஜ் நகர் போலீஸார், குடோனின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo