மாணவியை கழுத்தை அறுத்து கொன்ற தாய் மாமன்

by Staff / 15-10-2023 01:05:54pm
மாணவியை கழுத்தை அறுத்து கொன்ற தாய் மாமன்

திருப்பத்தூர் மாவட்டம் கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் ஜீவிதா(18). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். ஜீவிதாவின் தாய் மாமன் சரண்ராஜூம் (35) மாணவி ஜீவிதாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஜீவிதா சரண்ராஜிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ், வீட்டில் தனியாக இருந்த ஜீவிதாவின் வாயில் துணியை வைத்து அடைத்து, கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார். நிலக்கல் நத்தம் பகுதியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via
Logo