தாமிரபரணி ஆற்றில் ஆடைகளை விடக்கூடாது என்றும் அஸ்தி கரைக்கும் பொழுது ...உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..
தாமிரபரணி ஆற்றில் ஆடைகளை விடக்கூடாது என்றும் அஸ்தி கரைக்கும் பொழுது சுட்ட மண் சட்டிகளை பயன்படுத்தாமல் சுடப்படாத சட்டிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றும் நதியை மாசுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்துவது; நதிநீரை பாதுகாப்பது போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆற்றில் நீராடிய பின் ஆடைகளை அங்கேயே விட்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்படுவதாகவும் அஸ்தி மற்றும் பூஜை பொருட்களை கரைக்கும் போது சுட்ட மண் சட்டி களுக்கு பதிலாக சுடப்படாத மண் சட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் நதிகளை புனிதமாக கருத வேண்டும் என்றும் மனிதர்களின் செயல்பாடுகளால் அவை மாசு அடைவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஆற்றில் விடப்படும் ஆடைகள் மக்குவதற்கு பல வருடங்கள் ஆகும் என்றும் மேலும் ஆடைகளில் உள்ள செயற்கைச் சாயங்கள் நீரை நஞ்சால் கோதாலும் சுட்ட மண் சட்டிகள் தண்ணீரில் கரையாமல் அப்படியே தங்கி ஆற்று படுகைகளை சேதப்படுத்துவதாலும் சுடப்படாத பச்சை மண் சட்டிகளை தண்ணீரில் எளிதாக கரைந்து மண்ணோடு மண்ணாக மாறிவிடும் என்பதனாலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் மற்றும் ரசாயன பொருள்கள் கலக்காமல் தடுப்பது மூலம் ஆற்று நீர் மற்றும் அதில் வாழும் மீன் உள்ளிட்ட உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்றும் பொதுமக்கள் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுரைகளோடு கூடிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழக மலைகளில் தோன்றி, தமிழ் நிலத்திலே பாய்ந்து ,தமிழ் மண்ணை செழிக்க வைத்து, கடலில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணி..
Tags :


















