போலீஸ் ஸ்டேசன் முன் தீக்குளித்த காவலர் பலி

by Staff / 29-04-2023 12:35:57pm
போலீஸ் ஸ்டேசன் முன் தீக்குளித்த காவலர் பலி

திருச்சி: லால்குடி அருகே உள்ள செம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் லால்குடி கிளை சிறையில் முதல்நிலை காவலராக உள்ளார். ராஜாவுக்கும், அவரது தம்பி நிர்மலுக்கும் இடையே சொத்துப் பிரச்னை உள்ளது. இதுகுறித்து புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, நேற்று லால்குடி போலீஸ் நிலையம் முன் ராஜா தீக்குளித்துள்ளார். தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜாவின் உயிர் இன்று காலை பிரிந்தது. இதுதொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே வழக்கை முறையாக விசாரிக்காததாக லால்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொற்செழியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories