122வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

by Staff / 20-09-2022 11:40:44am
122வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏறியதால் விலைக்குறைப்பு மேற்கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்பிறகு கிட்டதட்ட 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி அதே விலையில் விற்பனையாகிறது. அதன்படி, 122-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

 

Tags :

Share via

More stories