இன்று சென்னை கடற்கரை -வேளச்சேரி இடையான பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது.
இன்று சென்னை கடற்கரை -வேளச்சேரி இடையான பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது. வேளச்சேரி ப-ரங்கிமலை இடையேயான புதிய வழித்தடம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இரு மார்க்கத்திற்கும் பயணம் செய்பவர்களுக்காக 43 ரயில்கள் சென்னை கடற்கரை மற்றும் பரங்கிமலை இடையே நேரடியாக இயக்கப்படுகிறது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்களுடன் இந்த சேவையும் இணைக்கப்படுகிறது. கடற்கரை -வேளச்சேரி இடையே இரண்டு ரயில்களும் வேளச்சேரி -பரங்கிமலை இடையே 3 ரயில்களும் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. கடற்கரை -எழும்பூர் இடையே நான்காவது ரயில் பாதை பணிகளுக்காக சிந்தாதிரிப்பேட்டை- கடற்கரை இடையே சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தன .ஆனால், தற்போது அனைத்து பணிகளும் முடிந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலுக்கு பிறகு இந்த முழுமையான சேவை மீண்டும் தொடங்குகிறது.
Tags :


















