பானிபூரி விற்கும் பி.டெக் பெண்

by Staff / 10-03-2023 03:42:54pm
பானிபூரி விற்கும் பி.டெக் பெண்

பட்டப்படிப்பு படித்துவிட்டு இன்று பலர் வேலை தேடி அலைகிறார்கள். ஆனால், சுய தொழில் வாய்ப்பை பயன்படுத்தி இளம்பெண் ஒருவர் வியக்க வைக்கிறார். பி.டெக் படித்த இளம்பெண் ஒருவர் பானிபூரி விற்பனை செய்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். டெல்லியைச் சேர்ந்த 21 வயதான டாப்ஸி உபாத்யாய் பி.டெக் படித்துள்ள போதிலும், மக்களுக்கு சுவையான, சுகாதாரமான தள்ளுவண்டிக்கடை உணவை வழங்க விரும்பினார். இதன் மூலம் பி.டெக் பானிபூரி பெண்ணாக அவதாரம் எடுத்தார். சொந்த பைக்கில் கடை அமைத்து, முக்கிய வீதிகளில் பானிபூரி விற்று சம்பாதிக்கிறார்.

 

Tags :

Share via

More stories