நடிகர் தனுஷ் வழக்கு - இன்று தீர்ப்பு

by Editor / 05-08-2021 08:41:18am
நடிகர் தனுஷ் வழக்கு - இன்று  தீர்ப்பு

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்திருந்த சொகுசு காருக்கு நடிகர் தனுஷ் வரிவிலக்கு கோரிய வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு தனுஷ் வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார்.இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்த வேண்டும் என்று வணிகவரித் துறை உத்தரவிட்டது. அதற்கு வரி விலக்கு கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நடிகர் தனுஷ் 50% வரி செலுத்தினால் மட்டுமே அவரது காரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 2015இல் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது .

இதனையடுத்து , நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ரூ . 3.33 லட்சத்தை வரியாக நடிகர் தனுஷ் செலுத்தியதால் , விதிமுறைகளை பின்பற்றி காரை பதிவு செய்ய ஆர் . டி . ஓ அலுவலகத்திற்கு 2016 இல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது .

இந்நிலையில் , இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தனுஷ் சார்பாக வழக்கறிஞர் ஆஜராகவில்லை . இதனால் , வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது .

மேலும் , இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் . எம் . சுப்பிரமணியம் அவர்கள் உத்தரவு பிறப்பிக்க உள்ளார் . நடிகர் விஜய் வழக்கிலும் இவர் தான் உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பதால் , நடிகர் தனுஷுக்கு வழங்கப்படும் தீர்ப்பு குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது .

 

Tags :

Share via