ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000

by Staff / 21-11-2023 02:21:21pm
ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000

ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. இதனால் இரு கட்சிகளும் மாறி மாறி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள்: குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு கால்நடைகளின் சாணம் ரூ2-க்கு 1 கிலோ கொள்முதல் அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அல்லது டேப்லெட் இயற்கை பேரிடர் இழப்புகளுக்கு நஷ்ட ஈடாக ரூ.15 லட்சம் இலவச காப்பீடு சிரஞ்சீவி காப்பீட்டு திட்டத்தின் தொகை ரூ.50 லட்சமாக உயர்வு

 

Tags :

Share via

More stories