மைசூரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 5 பேரையும் 10 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி...

by Admin / 29-08-2021 10:51:44pm
மைசூரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 5 பேரையும் 10 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி...



கர்நாடக மாநிலம் மைசூரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் 10 நாள் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

 கர்நாடகம் மாநிலம் மைசூருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சாமுண்டிகோயில் மலைப்பகுதிக்கு கடந்த 24-ம் தேதி இரவு தனது ஆண் நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அவர்களை வழிமறித்த கும்பல் ஒன்று, பணம் கேட்டு மிரட்டி, பின், ஆண் நண்பரை தாக்கிவிட்டு அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், செல்போன் டவர் மூலம் 6 பேர் கொண்ட கும்பல் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.

மேலும் செல்போன் டவர் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த பூபதி என்பவரை கைது செய்து, பின் கிடைத்த தகவலின்பேரில், எஞ்சிய 5 பேரில் 4 பேரை கைது செய்து, தலைமறைவான மற்றொருவரை தேடி வந்தனர்.விசாரணையில் கூலித்தொழிலாளிகளான திருப்பூரைச் சேர்ந்த பிரகாஷ், கருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த முருகேசன், சேவூரைச் சேர்ந்த ஜோசப் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
 
இந்நிலையில் நேற்று நள்ளிரவு குற்றவாளிகளை மைசூர் முதன்மை குற்றவியல் நீதிபதி முன் போலீசார் ஆஜர்படுத்தினர். இதனைடுத்து 5 பேரையும் 10 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரையும் ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via