திருமலை குமாரசாமி திருக்கோவில்

by Admin / 16-07-2022 09:34:44pm
திருமலை குமாரசாமி திருக்கோவில்


மேற்குத் தொடர்ச்சி  மலைகளின் பசுமை  பூத்துக்கிடக்கும் செம்மண் பூமியில் செழித்து வளர்ந்தோங்கி  அறுபடை வீடுகளில் தன்னை ஆட்கொண்டது  போதாதென்று  மலை குன்றில் எழுந்தருளி  இறையருளை  அள்ளி வழங்கும்  அருள் முருகன் வீற்றிருக்கும் பதியே பண்பொழில் திருமலை  குமார சுவாமி  திருக்கோவில். கந்த கடவுள்  எழுந்தருளியிருக்கும்  குன்று
ஐநூறுக்கும்  மேற்பட்ட  படிகளைக் கொண்டது. முழு முதற்கடவுளாம்  விநாயகரை தரிசித்து மலை மீது ஏறுகையில் முருக  பெருமானின்  இரண்டு பாதங்களின் பதிவை  வணங்கி  மேலே செல்ல..சின்ன கோவில்கள்..அந்தந் த  தெய்வங்களை வணங்கி  ..மேலே  செல்கையில் ..உச்சியிலிருந்து பார்த்தால்  குன்றை   சுற்றி  பச்சை   புடவை  கட்டிய  வயல்வெளிகள்.
கண்  கொள்ள  காட்சியை   நமக்கு நல்கும் ..இங்கு  குடிகொண்டிருக்கும்  முருகனை  தரிசித்தால் ..சகல  பாக்கியமும் கிடைக்க பெறும் .இக்கோவில்  குற்றாலத்திலிருந்து சுமார் ஏழு மைல் தொலைவு . செங்கோட்டையிலிருந்து  நான்கு  மைல் தூரம்.

திருமலை குமாரசாமி திருக்கோவில்
 

Tags :

Share via