முன்னாள் அமைச்சர் ஊருக்குள் நுழைய எதிர்ப்பு.செருப்பு வீச்சு

by Editor / 22-12-2021 12:43:31am
முன்னாள் அமைச்சர்  ஊருக்குள் நுழைய எதிர்ப்பு.செருப்பு வீச்சு

பொள்ளாச்சி அருகே உள்ள குருநல்லிபாளையம் ஊராட்சியில் 152 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோதவாடி குளம் உள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன கால்வாயில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த குளம் நேற்று இரவு நிரம்பியது. இந்த குளம் பல் ஆண்டுகாலமாக தூர்வாரபபடாமல் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளநிலையில் இந்த குளத்தை இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஓன்று கூடி குளத்தை செம்மைபடுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குளம் நிரம்பியதை கொண்டாடும் வகையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் குளக்கரையில் உள்ள கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இதில், பங்கேற்க சென்ற, முன்னாள் சட்டபேரவை துணை சபாநாயகர் மற்றும் தற்போதைய பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமனை, அப்பகுதி தி.மு.க.,வினர் வெளியேற சொல்லி கோஷம் எழுப்பினர். இதனால், அங்கிருந்த அதிமுக மற்றும் திமுக., வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது, கூட்டத்தில் இருந்த சிலர் செருப்புகள் வீசியதில் கூட்டத்தில் இருந்த ஒருவர் மீது செருப்பு விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

முன்னாள் அமைச்சர்  ஊருக்குள் நுழைய எதிர்ப்பு.செருப்பு வீச்சு
 

Tags :

Share via