சீமான் கோமணம் இல்லாமல் போவார் கோவில்பட்டியில் ஆர் எஸ் பாரதி ஆவேசம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தமிழக சமூகநலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில் :
திமுகவை அழித்து விடுவோம் என்று சிலர் கூறுகின்றனர். திமுகவை அழிக்க நினைத்தவர்கள் - வாழ்ந்தாக சரித்திரம் இல்லை, முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த போது எடப்பாடி பழனிச்சாமி மெரினாவில் இடம் கொடுக்க மறுத்துவிட்டார்.அன்றைக்கு திமுகவினர் கண்ணீர் விட்டனர். அதனாலதான் அதிமுக இன்று உடைந்து விட்டது. நீதிமன்றத்தின் மூலமாக போராடி பெற்றோம்.
பெண்களுக்கு செய்தால் நன்றி மறக்க மாட்டார்கள் என்பதால் தான் திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திற்கு 8 முறை மோடி வந்தார். கவனம் செலுத்தினார். ஆனால் திமுக கூட்டணி- 40/40க்கு வெற்றி பெற்றது. மகளிர் உரிமை துறை திட்டம் காரணமாக அதிக அளவு பெண்கள் வாக்குகளைப் பெற்றோம்.இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி புலம்புகிறார்.
திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது குறித்து சிவகங்கையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்,அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று கூற முடியுமா அவர்களால் ஜெயலலிதா வீட்டை கூட பாதுகாக்க முடியவில்லை,அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் டிஜிபியாக இருந்தவர் பெண் எஸ்பியை கைய பிடித்து இழுத்து தகராறு செய்து நான்காண்டுகள் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சிவகாசி ஜெயலட்சுமி சம்பவம் நடைபெற்றது. அது போன்று திமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை,அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு காரணம் கவர்னர் தான். அவரால் தான் அங்கு பணியாளர்களை நியமிக்க முடியவில்லை.
பெண்களை பாதுகாக்க இந்தியாவை பாராட்டும் அளவிற்கு முதல்வர் மு க ஸ்டாலின் சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளார். திமுகவை பாராட்ட மனம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி திட்டுகிறார்.திமுகவை எதிர்க்க இன்று ஆள் இல்லை,நாம் தமிழர் கட்சி நடத்துற யோக்கியதை , உரிமை சீமானுக்கு கிடையாது.
அந்தக் கட்சியை தொடங்கிய சி.பா. ஆதித்தனார் 1967ல் திமுக கூட்டணிக்கு வந்தார். அண்ணா அவருக்கு சபாநாயகர் பதவி தந்தார். அண்ணா மறைவிற்குப் பின்னர் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றதும் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்து அமைச்சராகி விட்டார்.கட்சி தொடங்கியவர் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்த பிறகு அப்புறம் ஏது கட்சி...?
அவர் மறைந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் இன்றைக்கு நான் தான் வாரிசு என்று சீமான் மோசடியாக கட்சியை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்,இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று நிலை நடைபெற்ற கூட்டத்தில் நான் சீமானுக்கு சவால் விட்டேன் .நான் முதலமைச்சர் துணை முதல்வர் தான் கேட்கட்டும் என்று கூறுகிறார். அவர்கள் கால் செருப்புக்கு கூட இணையாக மாட்டார். சீமானுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும்,கட்சியினரை தூண்டிவிட்டால் சீமான் சீமானாகப் போக முடியாது கோமணம் இல்லாமல் போவார் ஜாக்கிரதை. அப்படிப்பட்ட ஆளெல்லாம் எங்க கிட்ட இருக்கிறாங்க.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை போர்ஜரி செய்து பயன்படுத்தி வருகிறார். ராஜ்குமார் என்பவர் இந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
பிரபாகரன் படத்தை வைத்து நல்ல வியாபாரம் செய்தார்.விடுதலை புலிகளின் தலைவர் 1980ல் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டார். அதே கேள்விபட்ட கருணாநிதி ஜாமீனில் எடுக்க அறிவுறுத்தினர். பிரபாகரனுக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்தேன். நீதிமன்றத்தில் ஆவணங்கள் உள்ளது பார்த்து தெரிந்து கொள்ளட்டும். 48 விடுதலை புலிகளை ஜாமீனில் எடுத்த கட்சி திமுக. அன்றைக்கு எங்கு இருந்தார் சீமான்,
சீமான் யார் என்பதை புரிந்து கொண்டார்கள், வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் கொடுத்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது.இதனால் சீமான் பாஜகவுடன் இணைந்து கொண்டு அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு பெரியாரைப் பற்றி பேசி வருகிறார்,
சீமான் பெரியாரை திட்டியதும் அண்ணாமலை மாலை போடுகிறார், எச் ராஜா, தமிழிசை வாழ்த்துகின்றனர்.
பாஜகவினால் பெரியாரை ஒழிக்க முடியவில்லை. நூறு வருடமாக பெரியாரை ஒழிக்க முயற்சி செய்தனர். சூனியம் வைத்து சாகடிக்க பார்த்தனர்.
பெண்களுக்கான உரிமை பெண்களுக்கு சொத்துரிமை வாங்கிக் கொடுத்தவர் பெரியார்.தாழ்த்தப்பட்டவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக வர வேண்டும் என்பதற்கு காரணமாக இருந்தவர் பெரியார்.
இவ்வளவு செய்த பெரியாரை நேற்று வந்த திருட்டுப் பையன் - எல்லோரிடமும் வசூல் செய்து சாப்பிட்டு கொண்டிருக்கக் கூடிய ஒருவன் பெரியாரைப் பற்றி பேசினால் தாங்கிக் கொள்வோமா ..
திமுக அழிக்க ஒழிக்க பலரும் புறப்பட்டு வந்துள்ளனர். திமுகவினர் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்.எதை வேண்டுமானாலும் மத்திய அரசு செய்யும். ஆனால் அத்தனையும் சந்திக்கக்கூடிய ஆற்றல் நம்மை வழிநடத்தும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு உண்டு அதை அவர் பார்த்துக் கொள்வார் என்றார்.
Tags : சீமான் கோமணம் இல்லாமல் போவார் கோவில்பட்டியில் ஆர் எஸ் பாரதி ஆவேசம்.