சபரிமலையில் மண்டல பூஜை-451 சவரன் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை.
சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் இன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திருவிதாங்கூர் சித்திரை திருநாள் மகாராஜா அளித்த 451 சவரன் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது. ஐயப்பனுக்கு சபரிமலை தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி அருண்குமார் சிறப்பு பூஜை செய்தனர். தங்க அங்கி ஊர்வலம் கடந்த 22-ந்தேதி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது. அந்த ஊர்வலம் இன்று பிற்பகலில் பம்பையை வந்தடைந்தது.சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு தங்க அங்கி கொண்டு வரப்படுவதால், நாளை (டிச.25) மதியம் முதல் மாலை வரை பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதி இல்லை என தேவஸ்வம் போர்டு அறிவிப்பு. இன்று 50,000 பக்தர்களுக்கும், 26ம் தேதி 60,000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tags :