பழிக்குப்பழி.. 5 சிறுவர்கள் வெறிச்செயல்
மதுரை மேல் அனுப்பனாடியை சேர்ந்துவர் கருப்பையா என்பவரின் மகன் ரமேஷ். மது போதைக்கு அடிமையான அவர் அப்பகுதியில் வரும் நபர்களை வம்பிழுத்து சண்டையிடுவது வழக்கம். இந்நிலையில் மது அருந்திவிட்டு அவர் வேலை பார்க்கும் கடையில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த 5 சிறுவர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், போதையில் அப்பகுதியில் துரைராஜ் என்ற சிறுவனின் தந்தை காலில் கல்லைப்போட்டு காயப்படுத்தியதால் இவ்வாறு கொலை செய்ததாக தெரியவந்தது. இதனையடுத்து சிவகங்கை பகுதியில் பதுங்கியிருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags :



















