பிளே ஸ்டோரில் இருந்து செயலிகள் அகற்றம் - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

by Staff / 03-03-2024 02:05:14pm
பிளே ஸ்டோரில் இருந்து செயலிகள் அகற்றம் - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  விளக்கம்

கட்டணம் செலுத்தாததால், கூகுள் சில இந்திய செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளை அகற்றுவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், செயலிகளை அகற்ற அரசு அனுமதிக்காது எனவும் தெரிவித்தார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கூகுள் மற்றும் நீக்கப்பட்ட செயலி நிறுவனங்களுடன் அடுத்த வாரம் சந்திப்பு நடத்தப்படும் என்றார்.

 

Tags :

Share via