தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற மாபெரும் நிகழ்வு
இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற மாபெரும் நிகழ்வு மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்க தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்வில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17 லட்சம் பெண்களுக்கு உரிமைத் தொகையை வழங்கும் திட்டத்தை முறைப்படி முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதற்கு முன்பாக பயன் பெற்று வரும் சுமார் 1.13 கோடி பயனாளிகளுடன் புதிதாக 16.94 339 பெண்கள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய பயனாளிகளின் வங்கி கணக்குகளில் இன்று முதல் மாதம் தோறும் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வர வைக்கப்படும். இது பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அல்ல உழைக்கும் பெண்களுக்கு அளிக்கும் அங்கீகாரம் மற்றும் உரிமை தொகை என்றும் எதிர்காலத்தில் இந்த உரிமைத் தொகை மேலும் உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்
Tags :


















