அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இல.கனேசன் குடும்பத்திற்கு ஆறுதல்.
பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமாக இருந்த இல.கணேசன் (80) கடந்த ஆக.15ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் அவரது இல்லத்திற்குச் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இல.கனேசன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டுள்ள இல.கணேசன் படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Tags : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இல.கனேசன் குடும்பத்திற்கு ஆறுதல்



















