சென்னை ,தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் பதவிநீக்கம்.

சென்னை மாநகராட்சியில் இரு கவுன்சிலர்கள் தாம்பரம் மாநகராட்சியில் ஒரு கவுன்சிலர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் ஆகியோரை பதவிநீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். உள்ளாட்சி விதிகளை மீறியதாக சென்னையின் 189வது வார்டு கவுன்சிலர் பாபு, 5வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், தாம்பரத்தில் 40வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags : தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் பதவிநீக்கம்.