பள்ளி மாணவர் திடீர் மரணம்

கரூர் அருகே காக்காவாடி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பயின்று வரும் மாணவர் சந்தோஷ். இவர் அங்கு 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் நேற்று விடுதியில் இரவு உணவு சாப்பிட செல்லும் போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் விசாரணையில் மாணவருக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே மாணவரின் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
Tags :