இளையராஜாவின்பாடல்களை வேறு வடிவங்களில் மாற்றுவதற்கும் அனுமதி முக்கியம் . சென்னை உயர்நீதிமன்றம்
இளையராஜா இசையமைத்த பாடல்களை அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதற்கு எதிராக இளையராஜாவால் தொடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்திருந்தது. இந்நிலையில், பட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி பிலிம்ஸ் சோனி நிறுவனத்திடம் இருந்து தாங்கள் உரிமை பெற்று தான் படத்தில் பயன்படுத்தி உள்ளோம் என்று கூறி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் இளையராஜாவின் பாடல்களை அனுமதி பெறாமல் பயன்படுத்தவும் பாடல்களை வேறு வடிவங்களில் மாற்றுவதற்கும் இளையராஜாவின் அனுமதி முக்கியம் என்று கூறி, விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு எந்த தேவையும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
Tags :


















