திலகபாமா நீடிப்பார் - அன்புமணி அறிவிப்பு

by Editor / 30-05-2025 01:51:45pm
திலகபாமா நீடிப்பார் - அன்புமணி அறிவிப்பு

பாமக பொருளாளராக திலகபாமா நீடிப்பார் என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவில் நடக்கும் தலைமை யுத்தம் காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸ் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதனிடையே, திலகபாமாவை பொருளாளர் பொறுப்பில் இருந்து நீக்கி ராமதாஸ் அறிவித்தார். இந்நிலையில், பொருளாளர் பொறுப்பில் திலகபாமா நீடிப்பார் என அன்புமணி ராமதாஸ் அறிவித்து இருக்கிறார். விரைவில் இதுதொடர்பான அறிவிக்கை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via