நள்ளிரவில் காரில் சென்ற ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்

by Editor / 19-07-2022 04:40:08pm
நள்ளிரவில் காரில் சென்ற ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்

 நாமக்கல் அருகே நள்ளிரவில் காரில் சென்ற ரியல் எஸ்டேட் புரோக்கர் குத்திக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ரியல் எஸ்டேட் புரோக்கர் குமரேசன் நேற்று இரவு எம்ஜிஆர் நகர் அருகே டாஸ்மாக்கில் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். குமரேசன் காரை ஓட்டி சென்றதாகக் கூறப்படும் நிலையில் நள்ளிரவில் திருச்சி சாலையில் கழுத்தில் கத்திக்குத்து. காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதை  கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமரேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இந்த நிலையில் குமரேசனை காரில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கொலை செய்தவர்கள் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories