ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றது.
இன்று ஹைதராபாத் ராஜிவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னைசூப்பா் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.. டாஸ் வென்றஹைதராபாத் அணி பந்து வீச்சைத்தோ்வு செய்தது .சென்னைசூப்பா் கிங்ஸ் அணி களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது.. 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது.. 166 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்ஸ்மேன்கள் தீவிர முனைப்புடன் ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். .நான்கு விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றது.
Tags :



















