முட்டை கோஸை நாசம் செய்த காட்டு யானை

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே கும்டாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பூவேந்திரன் என்பவரது தோட்டத்தில் நேற்று இரவு நுழைந்த ஒற்றை காட்டு யானை முட்டைக்கோஸ் பயிர்களை தின்று நாசம் செய்தது. ஒற்றை காட்டு யானையை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். வனத்தை ஒட்டியுள்ள சேஷன்நகர், ராமாபுரம், கும்டாபுரம் ஆகிய பகுதிகளில் தினம்தோறும் ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்து வருவதால் தாளவாடி வனத்துறையினர் தினசரி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags :