முன்விரோத காரணமாக கத்தியால் வெட்டிய இருவர் கைது

by Staff / 18-03-2023 02:37:15pm
முன்விரோத காரணமாக கத்தியால் வெட்டிய இருவர் கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜெகநாதன் தெரு பகுதியை சேர்ந்தவர் தருண்குமார்(26) கடந்த ஆறு வருடங்களாக எம். சி ரோட்டில் உள்ள சொல்லுங்க ஜி என்ற துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இவர் பணி புரியும் கடைக்கும் கே ஜி எஃப் கடைக்கும் தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் ரவுடி வெள்ளை நாகராஜை வைத்து அடிக்கடி மாறி மாறி சண்டையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததையடுத்து இரண்டு தரப்பிலும் வழக்கு பதிவு செய்து 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் இந்த வழக்கை திரும்ப பெறக்கோரி நாகராஜ் என்கிற வெள்ளை நாகராஜ் தருண்மாரிடம் செல்போனில் அழைத்து வழக்கு குறித்து நேரில் சந்தித்து பேச வேண்டும் என்றும் சூரிய நாராயண சாலையில் உள்ள செறியன் நகர் பகுதிக்கு வருமாறு கூறியதை அடுத்து தருண்குமார் அந்த இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த இரண்டு மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்
இது குறித்து தருண்குமார் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில்  புகார் அளித்தார் புகாரின் பேரில் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட காசிமேடு பகுதியை சேர்ந்த ஜெகன் மற்றும். பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சாய்ராம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo