வழிப்பறிக் கொள்ளையர்கள் கைது

மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்னகாமன் மற்றும் காவல்துறையினர் சிறுமுகைச் சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுமுகைச் சாலையிலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் உள்ள கருப்பராயன்குட்டை அருகே 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தனர். காவல்துறையினரைக் கண்டதும் அவர்கள் தப்பிஓட முயன்றனர். ஆனால், காவல்துறையினர் அவர்களைச் சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சச்சின் என்ற நவீன்குமார் (19 வயது), திலீப் (19 வயது), கௌரிசங்கர் (22 வயது), விக்னேஷ் (19 வயது) மற்றும் சேகர் என்ற நாயக்கர் சேகர் (32 வயது) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், அவர்கள் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. காவல்துறையினர் அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :