தென்காசி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் படை சூழ ராக்கெட் ராஜா ஆஜர் - போலீசார் குவிப்பால் பரபரப்பு
தென்காசி மாவட்டம் சுரண்டையில் கடந்த 2009ம் ஆண்டில் காவலரை தாக்கிய வழக்கில், பங்களா சுரண்டையை சேர்ந்த கோழி அருள் என்பவர் உட்பட இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கோழி அருளை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது தான் ராக்கெட் ராஜாவுடன் இருப்பதாக கூறினார். இத்தகவலின் பேரில் போலீசார் 2009-ஆம் ஆண்டு ராக்கெட் ராஜா வீட்டில் நடத்திய சோதனையில், அங்கு ராக்கெட் லாஞ்சரும், ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தக் கூடிய தோட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அவருடைய வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததையடுத்து அவர் மீது ஆயுத பதுக்கல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனர் ராக்கெட் ராஜா தென்காசி முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி ராஜவேலு முன்பாக ஆஜர் செய்யப்பட்டார்.
ராக்கெட் ராஜா நீதிமன்றத்திற்கு வருகையொட்டி துணை காவல் கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர். நீதிமன்றத்திற்கு புதிய இனோவா வாகனத்தில் தனது தொண்டர்கள், வழக்கறிஞர்கள் படை சூல வருகை தந்தது குறிப்பிடத்தக்கது
Tags : தென்காசி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் படை சூழ ராக்கெட் ராஜா ஆஜர் - போலீசார் குவிப்பால் பரபரப்பு