முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா ? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

by Staff / 07-09-2023 12:51:27pm
முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா ? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா? -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். . இது குறித்து அறிக்கையில், 'ஒரு செய்தி வந்தால் அது உண்மையா பொய்யா என்பதை அறிந்துகொள்ளும் அனைத்து வசதிகளும் நாட்டின் பிரதமருக்கு உண்டு. அப்படி இருக்க, அமைச்சர் உதயநிதி சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப் பரப்பியது குறித்து பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தே தான் பேசுகிறாரா? மக்களை திசை திருப்பி சனாதனப் போர்வையைப் போர்த்திக் குளிர்காய நினைப்பதாக தெரிகிறது. இந்தியா கூட்டணிக்குள் எப்படியாவது விரிசலை ஏற்படுத்திவிட முடியாதா என்ற அரசியல் கணக்குதான் ,இது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via