இந்தியாவிலேயே அதிகளவில் கொரோனா தடுப்பூசி  செலுத்திய மாநிலம் தமிழகம் தான் - அமைச்சர் தங்கம் தென்னரசு 

by Editor / 30-07-2021 06:49:53pm
 இந்தியாவிலேயே அதிகளவில் கொரோனா தடுப்பூசி  செலுத்திய மாநிலம் தமிழகம் தான் - அமைச்சர் தங்கம் தென்னரசு 


நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் தாமிரபரணி நதிக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வேந்தன் குளத்தை அழகுபடுத்தும் பணியினை தொடங்கி வைத்தார்.


பின்னர் நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகி வற்றாத ஜீவ நதியாக பாய்ந்து ஓடும் தாமிரபரணி நதியை மாவட்ட நிர்வாகம் சமூக ஆர்வலர்கள் மற்றும்  காவல் துறையினருடன் இணைந்து சுத்தம் செய்யும் பணி ஆறு தொடங்கும் இடமான விக்கரமசிங்கபுரத்தில் இருந்து நெல்லை மாவட்ட தாமிரபரணி ஆற்றின் எல்லை வரை சுமார் 22 இடங்களில் நடந்து வருகிறது அதனை காணொலி காட்சி வாயிலாக பார்வையிட்ட தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இயங்கிவரும் டயாலிசிஸ் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக தொழிலாளர் நலத்துறையின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  பின்னர் ஒரு கோடி ரூபாய் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி ஆம்ஃபி தியேட்டரை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம்தென்னரசு, நெல்லை மாவட்டத்தில் நடந்துவரும் நீர்நிலைகள் பராமரித்தல் பணிகள் மரம் நடும் பணிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற் கொண்டேன்.  இங்கு  உள்ள ஆயிரத்து 237 நீர்நிலைகளை நெல்லை நீர் வளம் என்ற இணையதளம் மூலம் ஆவணப் படுத்தும் பணி நடந்து வருகிறது மேலும் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வேந்தன் குளத்தை அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது.  தாமிரபரணி நதி தொடங்கும் விக்கரமசிங்கபுரம்  முதல் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் தாமிரபரணி ஆற்றின் எல்லை வரை இருக்கும் கரைகள் சுத்தம் செய்யப்பட்டு மரம் நடவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது தாமிரபரணி ஆற்றில் உள்ள பழமையான கல் மண்டபங்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாளையங்கோட்டையில் உள்ள பாரம்பரிய சின்னங்கள் பாதுகாக்கும் வகையில்  பராமரிப்பு பணிகள்  நடந்து வருகிறது.  நெல்லை அரசு அருங்காட்சியகம் ரூபாய் ஒரு கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு நவீன தொழில் நுட்ப வடிவிலான பணிகள் நடந்து உள்ளது. அரசு அருங்காட்சியகத்தில் ஒலி-ஒளி வாயிலாக வரலாற்றை மாணவ-மாணவிகள் கண்டு தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


 மேலும் மூன்றாவது அலையை  எதிர்கொள்ள முழு அளவில் தயார் நிலையில் இருப்பதாகவும் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் விதமாக குழந்தைகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் கொரனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகளும் வெண்டிலட்டர் வசதியுடன் இருபது படுக்கைகளும் தயார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.  மேலும் நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகப்படியான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை வீணடிக்காமல் முழுமையாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்

 

Tags :

Share via