புதிய நியாயவிலைக் கடையை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

by Staff / 22-08-2024 02:11:53pm
புதிய நியாயவிலைக் கடையை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மாதராஜபுரத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக் நியாய விலைக் கடை கட்டிடத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி திறந்துவைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொருள்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via