திமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி ஆலங்குளம் ஒன்றியம் குருவன் கோட்டைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி ராமகிருஷ்ணன்,முத்துகிருஷ்ணப் பேரி நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாலமோன் ஆகியோர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியின் போது தலைமை பொது குழு உறுப்பினர் சாமிதுரை ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் மாவட்ட விவசாய அணி தலைவர் இட்லி செல்வம் மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் மாவட்ட பிரதிநிதி அன்பழகன் கிளைக் கழக செயலாளர் இசக்கி முத்து தென்காசி நகர வார்டு செயலாளர் வேலை ஐயப்பன் பேரூராட்சி மன்ற உறுப்பினர் நாகராஜ் சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ....
Tags : திமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.